Tuesday, August 15, 2006

வணக்கம்


புதிதாய் வருகிறேன்
புதியதை பேச
பழையதும் இருக்கும்
பார்ப்போம்
நான் என்ன சொல்வேன்
பார்ப்போம்
நீங்கள் என்ன சொல்வீர்கள்
பதிவுகளில் சந்திப்போம் நண்பர்களே
ஆனால் நான் இங்கு புதியவனல்ல
"நானும்" மட்டுமே புதியது

ப்ளூ டூத்: ஓரு பார்வை

வயர்லெஸ் முறையில் குறைந்த தூரத்திற்கு தகவல்களை கடத்த பல தொழில்நுட்பங்கள் இருந்தாலும் தற்போது உலகளவில் பிரபலமாகி இருப்பது ப்ளூ-டூத் தொழில்நுட்பம்! இதை பற்றிய சில தகவல்களை பார்ப்போம்.


வளர்ந்து வரும் முக்கிய தொழில்நுட்பங்களில் ஒன்றான ப்ளூ-டூத் இந்தியாவில் அதிகமாக செல்போன்களிலும், மடிக்கணிணிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாய்ஸ் மற்றும் டேட்டா தகவல்களை குறைந்த தொலைவிற்கு வயர்லெஸ் முறையில் கடத்த இந்த ரேடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது.


தொழில்நுட்ப ரீதியாக பல காரணங்கள் இருந்தாலும், ப்ளூ-டூத் உபகரணங்கள் குறைந்த சக்தியில் (Low Power) இயங்கக் கூடியவையாக உள்ளன. மற்ற குறைந்த தூர வயர்லெஸ் உபகரணங்களோடு ஒப்பிடும் போது, இவற்றின் விலையும் குறைவாக உள்ளது. தொழில்நுட்ப நுணுக்கங்களிலும் பல பலன்கள் இருப்பதால் தொழில்நுட்ப வல்லுனர்களின் வரவேற்பையும் பெற்று பல்வேறு தேவைகளுக்கு (Applications) பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

உபயோகத்தில் உள்ள இடங்கள்


செல்போன்களின் ஹேண்ட்ஸ்-ப்ரீ செட்கள், பிரிண்டர்கள் மற்றும் பேக்ஸ் இயந்திரங்கள், பிடிஏ (PDA), மடிக்கணிணிகள், கணிணி இணைப்புகள், டிஜிட்டல் கேமிரா, சிடி பிளேயர்கள், கார்கள் ஆகியவற்றிலும் மொபைல் போன்களின் வெவ்வேறு அப்ளிகேஷன்களிலும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


மேலும் பல துறைகளில் ப்ளூ-டூத் விரைவில் வளர்ச்சியை எட்டும் என்று நம்பப்படுகிறது.

தொழில்நுட்ப தகவல்கள்


2.4 Mhz அலைவரிசையில் உபயோகப்படுத்தப்படும் இந்த ப்ளூ-டூத் தொழில்நுட்பத்தில் அலைவரிசை குறுக்கீடுகள் மிக மிக குறைவாக இருக்கும் என இத்துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


ப்ளூ-டூத் தொழில்நுட்பம் 1 மீட்டரிலிருந்து 100 மீட்டருக்குள் பயன்படுத்த கூடிய திறன் வாய்ந்தது. மேலும், தகவல்களை கடத்தும் இதன் வேகமும் மிக அதிகம்; தகவல்களை பாதுகாப்பாகவும் கடத்த உதவுகிறது.


உலகளவில் மின்னணு உபகரண உற்பத்தியாளர்கள், தங்கள் சாதனங்களில் உள்ள வயர் தொடர்புகளைக் குறைக்க ப்ளூ-டூத் தொழில்நுட்பத்தை தேடி வர துவங்கி உள்ளனர்.


இந்த தொழில்நுட்பத்தை குறிப்பிட்ட எந்த நிறுவனமும் கண்டு பிடித்து, மேம்படுத்தி வரவில்லை என்பது ஆச்சரியப்பட வைக்கும் உண்மை. இருந்தும், நாலாயிரத்துக்கும் மேம்பட்ட நிறுவனங்கள் இணைந்து இத்தொழில்நுட்பத்தை வளர்த்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் பின் இத்தொழில்நுட்பத்தை தங்கள் உபகரணங்களில் உபயோகித்துக் கொள்கின்றன.

நன்றி : வெப் உலகம்

பிடித்த தலைவர் :